Malligai Poovukul |
|---|
மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
னானான னானான னானான னானான
னானன னா னானன னா
பக்கத்தில் யாரோ சொர்க்கத்தின் தேரோ
மன்மதனின் வாரிசு யார்
நான் தானோ
னானானா னானானா
இருவர் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
பூச்சரம் சேகரிப்பேன்
இன்று ராத்திரி ஆதரிப்பேன்
பூச்சரம் சேகரிப்பேன்
இன்று ராத்திரி ஆதரிப்பேன்
பாதத்துச் சந்தனம் தேய்ந்திடும் என்று
உன் பாதையில் பூ விரிப்பேன்
பாதத்துச் சந்தனம் தேய்ந்திடும் என்று
உன் பாதையில் பூ விரிப்பேன்
நந்தவனம் பூத்திருக்க
தேவ மகன் தேனெடுக்க
நந்தவனம் பூத்திருக்க
தேவ மகன் தேனெடுக்க
மன்மத வேளையில் மன்னவன் எனது
கூந்தலுக்குள் மீன் பிடிக்க
இருவர் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
இன்றைக்கு போதும் விடு
எந்தன் பெண்மைக்கு காவல் இரு
இன்றைக்கு போதும் விடு
எந்தன் பெண்மைக்கு காவல் இரு
ஆனந்த செம்மைக்குள் ஆரம்ப பள்ளிக்குள்
என்னையும் சேர்த்து விடு
ஆனந்த செம்மைக்குள் ஆரம்ப பள்ளிக்குள்
என்னையும் சேர்த்து விடு
கன்னத்திலே காதல் மச்சம்
கொண்டவளே என்ன அச்சம்
கன்னத்திலே காதல் மச்சம்
கொண்டவளே என்ன அச்சம்
கூச்சங்கள் எதற்கு வெட்கத்தை நாளைக்கு
ஒத்தி வைத்தால் இன்பம் மிச்சம்
இருவர் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
லலல லலல லலலலல லலல லா லலல லா
பக்கத்தில் யாரோ சொர்க்கத்தின் தேரோ
மன்மதனின் வாரிசு யார்
நீதானே
லலலலலல
இருவர் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
