Maya Maya

Maya Maya Song Lyrics In English


மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ

உன் மடியில்
ஒரு பொன் நொடியில்
நான் சாய்ந்தால் போதும்
விரைவில் வருவாய்

உன் நெனைபின் இருளில்
பேர் அன்பின் ஒளியில்
நான் வாழ்ந்தால் போதும்
விரைவில் வருவாய்

ஒரு காலங்கள் தீர்ந்தாலும்
என்றும் தீராத காதல்
கை ஏந்தி கேட்டேனே

மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ

செடி கொடி இலை உறங்க
சினிகிடும் நதி உறங்க
மழைகளில் முகில் உறங்க
மை விழி மட்டும் கிறங்க

ஏகாந்த இரவும்
எரிகின்ற நிலவும்
தனிமையில் மாட்டும்
வாட்டும் ஹோ ஹோ


என் காதல் விதை
உன் காதல் மழை
உன் தூறல் தந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேனே

மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ

இதயத்தில் ஒரு பறவை
விரிக்கிது அதன் சிறகை
சிறகல்ல அது சிலுவை
உயிர் பெறு கொடு உறவை

வானத்தை அளந்தேன்
மேகத்தை பிளந்தேன்
காதலை காற்றில்
விதைத்தேன் ஹோ ஹோ

என் கூட்டின் அறை
உன் மார்பில் அமை
உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேன்

மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ