Onna Renda

Onna Renda Song Lyrics In English


ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்

ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

பாடினேன் பாடினேன் என்னாச்சு
எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு

ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

ஏழெட்டுப் பிள்ளைக்கு தகப்பனையா
இன்னமும் அலுக்கலியா

வாழுற வரையிலே மனுசனுக்கு
நித்தமும் பசிக்கலையா

இது தான் நமக்கு
முதல் நாள் இரவா

முதல் நாள் இரவை
நெனச்சா தவறா

நான் என்ன சொல்வது இனி மேலே
நடக்கட்டும் சாஞ்சுக்க மடி மேலே
நான் என்ன சொல்வது இனி மேலே
அடி மானே தேனே வா

கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்

ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு


காலடித் தாமரை நோகுமம்மா
நாலடி நீ நடந்தால்

வாலிப நாடகம் போதுமையா
நூலிடை தாங்கிடுமா

மெதுவா தொடுவேன்
வலிச்சா விடுவேன்

இடம் நான் கொடுத்தால்
மடிதான் கனக்கும்

ஆத்திரம் அவசரம் புரியாதா
இந்த ஆம்பள சங்கதி தெரியாதா

ஆம்பள சங்கதி தெரியாதா
புது ரோசப் பூப் போல் நான்

ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்

ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

பாடினேன் பாடினேன் என்னாச்சு
எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு

ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
இதன் காரணம் உன் மனம் தாராளம்