Poonthotta Kavalkara |
|---|
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா ஆஆஆ
மாம்பழத்தை மறந்து விட்டாயா
மறந்து விட்டாயா
மாம்பழத்தை மறந்து விட்டாயா
மறந்து விட்டாயா
தேர் ஏறி வருவாய் என்று
தெரு வீதி வலம் வந்தாள்
தேர் ஏறி வருவாய் என்று
தெரு வீதி வலம் வந்தாள்
தேர் கண்டாள் தேரே கண்டாள்
சிலை அதிலே இல்லையே ராஜா
தேர் கண்டாள் தேரே கண்டாள்
சிலை அதிலே இல்லையே ராஜா
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா
மலை மேலே மழை விழுந்து
வைகையிலே வெள்ளம் வந்து
மலை மேலே மழை விழுந்து
வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறி பாயும் முன்னே
வந்த வெள்ளம் போனது ராஜா
வயலேறி பாயும் முன்னே
வந்த வெள்ளம் போனது ராஜா
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா ஆஆஆ
மாம்பழத்தை மறந்து விட்டாயா
மறந்து விட்டாயா
பருத்திக் காட்டில்
பழம் கிடைக்கும்
பசி தீரும் என்று எண்ணி
ஒருத்தி இங்கே தேடுகின்றாளே
ஓஓஹோய்
ஒருதலையாய் பாடுகின்றாளே
பாடுகின்றாளே
நெற்றியிலே பொட்டு வைத்தாள்
நெஞ்சை அதில் தொட்டு வைத்தாள்
நெற்றியிலே பொட்டு வைத்தாள்
நெஞ்சை அதில் தொட்டு வைத்தாள்
தொட்டு வைத்த நெஞ்சுக்குள்ளே
தூங்குபவர் எவரோ யாரோ
தொட்டு வைத்த நெஞ்சுக்குள்ளே
தூங்குபவர் எவரோ யாரோ
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா ஆஆஆ
மாம்பழத்தை மறந்து விட்டாயா
மறந்து விட்டாயா
மாம்பழத்தை மறந்து விட்டாயா
மறந்து விட்டாயா
