Thavikkithu Thayanguthu Oru

Thavikkithu Thayanguthu Oru Song Lyrics In English


தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது

ஏதோ ஒன்று நெஞ்சிலே
எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே
ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லாலலல்லல்லாலாலலல்லல்லா
கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு

தவிக்குது தயங்குது ஒரு மனது

பொங்கும் ஆசை ஆற்றிலே
நனைந்த எந்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே
எழுந்து பாய்ந்து செல்லுமே
தோன்றுகின்ற தாகமே தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம் பல வித ரகம்
லாலலல்லல்லாலாலலல்லல்லா
பசிக்கொரு உணவென பாவை நீ வா வா

தவிக்குது தயங்குது ஒரு மனது


கங்கை கொண்ட சோழனின்
கனவில் வந்த தேவியே
மங்கை எந்தன் வாழ்விலே
மன்னன் நீயும் பாதியே

சிலையை போன்ற தோற்றமே
தினமும் என்னை வாட்டுமே
இன்னிசை சுரம் என் வசம் தரும்
லாலலல்லல்லாலாலலல்லல்லா
இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா

தவிக்குது
தயங்குது
ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து
எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது