Engal Dhraavida Ponnaade

Engal Dhraavida Ponnaade Song Lyrics In English


விந்தியம் குமரியிடை
விளங்கும் திருநாடேஏஏஆஅ
வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே
எங்கள் திராவிடப் பொன்னாடேஏ

எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடேஏ
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே

இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்
விலங்கும் செந்தமிழ் நாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே

சரித்திரம் பாடும் காவேரி
இளம் தளிர்க்கொடி போலே ஓடுகிறாள்
சங்கம் வளர்த்த மதுரையிலே
எங்கள் தமிழ் மகள்
தமிழிசை பாடிகிறாள்

விழிகளைப் போலே குமரியின் மேலே
மீன் மகள் துள்ளி ஆடுகிறாள்
விளையாடும் வைகை அழியாத பொய்கை
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே


எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே

சிங்களத் தீவின் கடற்கரையை
எங்கள் செந்தமிழ்த் தோழர்
அழகு செய்தார்
எகிப்திய நாட்டின் நதிக்கரையில்
எங்கள் இளந்தமிழ் வீரர்
பவனி வந்தார்

வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின்
வேல்விழி மகளை மணமுடித்தான்
விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம்
திசைதோறும் இசை பாடும் தாய்நாடே

எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்
விலங்கும் செந்தமிழ் நாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே