Ippadiyum Oruthan Undu |
|---|
இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
விடிஞ்சா போதும் குடிக்கணும்
பொழுது சாஞ்சா போதும் குடிக்கணும்
விடிஞ்சா போதும் குடிக்கணும்
பொழுது சாஞ்சா போதும் குடிக்கணும்
அட எந்தப் பய எக்கேடு
கெட்டுப் போனா எனக்கென்ன
என்றிருக்கும் இவன் போல யாரு உண்டு
இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
ஆ தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
வேலைய செஞ்சா லாபமும் இல்ல
செய்யா விட்டா நஷ்டமும் இல்ல
சம்பளம் வந்தா சரியா போகும் குடிக் கணக்கு
வாழ்க்கையில் ஒரு லட்சியம் இல்ல
பாதைய தேடும் அவசியம் இல்ல
தன் வழியில் போறதனால் இவன் தலைவனப்பா
சொல்லுகிற ஜோசியம் பலிக்காதிவனிடம்
இவன் சொல்லும் ஜோசியம் புதுசாகும்
அய்யனாரு சாமிக்குன்னு படைக்கிறதெல்லாம்
பையப் பைய இவன் கையில் மாட்டிக் கொள்ளும்
சுத்திச் சுத்தி வீதியில திரிகிற சுதந்திரம்
மொத்தமா கெடச்சது இவனுக்கப்பா
இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
ஒடம்பில் துணி இருந்தால் என்ன
இல்லா விட்டால் இவனுக்கென்ன
தலையில் தண்ணி பட்டால் தானே சலவத் துணி
ஏறுன போத எறங்க விடாம
அதுல ரொம்ப கவனம் வைப்பான்
எறங்கிச்சுன்னா பஞ்சுல தீயா பறபறப்பான்
தான் போற போக்குல போகுற இவனுக்கு
தன் போக்கு எது இன்னு தெரியாது
பொல்லாப்பு இவனுக்கு புதுசா பழசா
நல் வாக்கு கெடச்சா செல்வாக்கு
வேண்டியது ஏதும் இல்ல
வேண்டாதது ஏதும் இல்ல
இவன் எந்த கணக்கிலும் இல்லையப்பா
இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது
விடிஞ்சா போதும் குடிக்கணும்
பொழுது சாஞ்சா போதும் குடிக்கணும்
அட எந்தப் பய எக்கேடு
கெட்டுப் போனா எனக்கென்ன
என்றிருக்கும் இவன் போல யாரு உண்டு
இப்படியும் ஒருத்தன் உண்டு
அதை எப்படி நான் சொல்லுவது
தப்பு எது சரி ஏது
சொன்னா ஒப்புக்கவும் தெரியாது