Kadhal Endru |
|---|
காதல் என்று கவிதை சொன்னால்
உலகம் ரசிக்குது
காதலிக்கும் கதையை சொன்னா
அடிச்சி வெரட்டுது
காதல் என்று கவிதை சொன்னால்
உலகம் ரசிக்குது
காதலிக்கும் கதையை சொன்னா
அடிச்சி வெரட்டுது
ஏட்டளவில் மட்டும்தாங்க
காதல் ஜெயிக்குது
வீட்டளவில் எட்டிப் பார்த்தால் ஊரும் எரியுது
அஞ்சறிவு மிருகம் கூட காதல் கொள்ளுது
ஆறறிவு மனிதன் ஏனோ அன்பை கொல்லுது
வாய் கிழிய பேசுவோர்கள் வேஷம் போடுறார்
நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்
நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்
முன்னோர் சொன்ன பகுத்தறிவு
அர்த்தம் பலர்க்கு புரியல
பெரியவா சொன்ன அன்பின்
குரலும் காதில் விழுகல
சாதிப் பித்தம் தலைக்கு ஏறி
நீதியின் அர்த்தம் தெரியல
மத்தவன எண்ணி வாழ்ந்து
பெத்தவ மனச கணிக்கல
கௌரவம் என்ற கானல் நீரில்
கருகிப் போகுது பிஞ்சுகள்
கேடு கெட்ட மனிதன் நெஞ்சில்
எத்தனை கோடி நஞ்சுகள்
அர்த்தமுள்ள இந்து மதம்
கண்ணதாசன் எழுதினார்
அர்த்தம் புரிந்து யார் இங்கே
அன்பில் வாழப் பழகினார்
கொலை களவு கொள்ளை தாண்டி
காதல் கொடும் பாவமா
கலைக் கவிதை காதல் என்பது
வாழ்க்கையில் பெரும் சாபமா
தண்டவாளம் இணை சேர்ந்தால்
ரயில் அதன் மேல் ஓடுது
தண்டவாளம் வம்பு சேர்ந்தால்
ரயில் உடல் மேல் ஏறுது
பாலுக்குக் கூட கலப்புப் பசுவை
தேடித் தேடி வாங்குது
வாழ்வுக்கு ஏங்கும் கலப்பு உறவை
தேடிப் போயி கொல்லுது
காசும் காசும் காதல் கொண்டால்
நாடே வந்து வாழ்த்துது
ஏழை வீட்டில் காதல் வந்தால்
தெய்வமும் எமனாய் மாறுது
காதல் என்று கவிதை சொன்னால்
உலகம் ரசிக்குது
காதலிக்கும் கதையை சொன்னா
அடிச்சி வெரட்டுது
ஏட்டளவில் மட்டும்தாங்க
காதல் ஜெயிக்குது
வீட்டளவில் எட்டிப் பார்த்தால் ஊரும் எரியுது
அஞ்சறிவு மிருகம் கூட காதல் கொள்ளுது
ஆறறிவு மனிதன் ஏனோ அன்பை கொல்லுது
வாய் கிழிய பேசுவோர்கள் வேஷம் போடுறார்
நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்
நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்
காதல் என்று கவிதை சொன்னால்
உலகம் ரசிக்குது
காதலிக்கும் கதையை சொன்னா
அடிச்சி வெரட்டுது