Kandhaga Boomiyile

Kandhaga Boomiyile Song Lyrics In English




கந்தக பூமியிலே
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு
பதறுதே பாதிசனம்

கந்தக பூமியிலே
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு
பதறுதே பாதிசனம்

எந்த வழி எமன் வந்தான்
யாருக்குமே தெரியலையே
ஆபத்துக்கு ஆண்டவனும்
ஓடிவந்து ஒதவலையே

காத்தில்லா அழுகுரல்
காதைக் கிளிக்குதே
ஒழைச்ச உடம்பெல்லாம்
உருகி கெடக்குதே

கந்தக பூமியிலே
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு
பதறுதே பாதிசனம்


கண்ணீர் சிந்தும் வாழ்க்கை இது
காப்பாத்தும் சாமி எது
அப்பன் இருந்த ஆத்தா இல்ல
ஆத்தா இருந்தா அப்பன் இல்ல
காலு இருந்தா கண்ணு இல்ல
கண்ணு இருந்தா காது இல்ல

வயித்து பொழப்புக்கு
வருஷமெல்லாம் வாடுறோமே
வயித்து புள்ளைக்கு அப்பன் யாரு
தேடுறோமே
மரணத்தை மடியிலே
கட்டிக்கிட்டு வாழுறோமே

கந்தக மண்ணுமேல
வெந்த சோறா
செதறி செதறி போனோமே
கந்தக மண்ணுமேல வெந்த சோறா
செதறி செதறி போனோமே

கந்தக பூமியிலே
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு
பதறுதே பாதிசனம்