Kanne Balu Kanmani Balu |
|---|
மற்றும் சக்தி சண்முகம்
கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
அட உன்னாலத்தானே
நாடு முன்னேற வேண்டும்
நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம்
போக்கிரி ராஜா உனக்கு
ஹேப்பி பர்த் டே டு யூ
ஹேப்பி பர்த் டே பாலு
அனைவரும் : கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
நாட்டை ஆண்டிட போகும்
நாளைய மந்திரி நீயோ
ஓட்டை போட்டதும் நீதான்
ஊரை மறந்திடுவாயோ
எல்லாரும் குடிச்சு கும்மாளம் அடிக்க
நல்லாட்சி நடத்திடுவாயோ
ஏராளமாக சாராயக் கடைய
எங்கேயும் திறந்திடுவாயோ
நல்லப் பிள்ளை போலேத்தான்
நடிப்பாயோ நீயும்தான்
உன்னை நம்பி தேசம்தான்
உருவாகும் நேரம்தான்
கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
அட உன்னாலத்தானே
நாடு முன்னேற வேண்டும்
நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம்
போக்கிரி ராஜா உனக்கு
அனைவரும் : கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
திருப்பூர் குமரனைப் போலே
கொடியை பிடிச்சிடுவாயோ
இல்லை மீனம்பாக்கத்தின் உள்ளே
வெடிய வெடிச்சிடுவாயோ
பேட்டைக்கு பேட்டை சோடாவ ஒடிச்சு
போராட்டம் நடத்திடுவாயோ
வேண்டாத பேர கூண்டுக்குள் நிறுத்தி
வீராப்பு பேசிடுவாயோ
இஷ்டம்போல நீயும்தான்
அரசாள போறாயோ
என்ன உந்தன் எண்ணம்தான்
எங்களிடம் கூறாயோ
கண்ணே பாலு கண்மணி பாலு
சொன்னா சொன்னதக் கேளு
அட உன்னாலத்தானே
நாடு முன்னேற வேண்டும்
நல் வாழ்த்துக்களை வழங்குகிறோம்
போக்கிரி ராஜா உனக்கு
அனைவரும் : லால் லா லல லா
லால் லா லல லா லால் லா
லால் லா லல லா
லால் லா லல லா லால் லா