Kootathile Kovil Pura |
|---|
கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
கூட்டத்திலே கோவில்
புறா யாரை இங்கு தேடுதம்மா
நான் பாடும்
ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ
தந்தது உன் பார்வை
என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன் ஆசை
என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே பூங்குயிலே
உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை
எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆனந்த மேடையில்
பூவிழி ஜாடையில் ஆயிரம்
காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா
நீதானே நானாடும்
பிருந்தாவனம் நின்றாடும்
தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன்
மேகமே
என் பாடல்
உன்னாலே உயிர்
வாழுமே கன்னிப்பெண்ணே
நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
தாமரைப்பூ
காலெடுத்து நீ நடக்கும்
வேளையிலே தாளத்துடன்
சந்தங்களைக் கற்றுக்கொண்டேன்
பொன்மயிலே
என்னிசை தீபத்தை
ஏற்றிய பொன்மயில்
வான்மழை போல்
இந்தப் பாவலன் நெஞ்சினில்
வாழிய வாழியவே
கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
கூட்டத்திலே
கோவில் புறா
கூட்டத்திலே
கோவில் புறா
கூட்டத்திலே
கோவில் புறா
கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா