Kulavum Yaazh Isaiyae |
|---|
குலவும் யாழ் இசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ
மதி குலவும் யாழ் இசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ
கலையின் சுவையெல்லாம்
தரும் கண்ணன் குழலிசையே
கலையின் சுவையெல்லாம்
தரும் கண்ணன் குழலிசையே
அலையும் மனதினிலே
இன்ப அருவியாகுமே
என் அலையும் மனதினிலே
இன்ப அருவியாகுமே
மதி குலவும் யாழ் இசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ
கல்லும் கரையும் கனிவான
வேணு கானாமிருதம்
கல்லும் கரையும் கனிவான
வேணு கானாமிருதம்
உள்ளம் உருகும்
உடலும் சிலிர்க்கும்
தெள்ளிய வானம் தரும்
பாலகோபாலனின் வேணுகானமிருதம்
வான் உலவும் காற்றிலே
ஞான இன்ப ஊற்றிலே
தேன் கலந்த பால் உடன்
தேன் கலந்த நாதமே
மனோகரம் மேவும்
சுகம் யாவும்
தரும் மாயவன்
மோகன ராகம் கேட்டால்
மோகம் மீறுமே
எவருக்கும் மோகன ராகம் கேட்டால்
மோகம் மீறுமே
மதி குலவும் யாழ் இசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ