Maatran Thootathu Maligaye

Maatran Thootathu Maligaye Song Lyrics In English


மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி
உன்னை நெருங்க அடி வைத்தால்
என்னை ஏதோ பின்னால் இழுக்குதடி

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன்
உன் இதழ்களில்தானே வசித்திருந்தேன்
தேனீல் விழுந்து மயங்கிடவே
என் இதயம் இதயம் பசித்திருந்தேன்

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
வேலிகள் தடுப்பதும் உண்மையடி
என் ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
உன்னை தொடுவதும் சரிதானாஆஅஆஅ
நம் தோம் தோம் த நம் தோம் தோம் தா


உன்னை தொடுவதும் சரிதானா
எனும் பயமும் பயமும் உண்மையடி

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி

தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்
தவறென உலகமே சொன்னாலும்
இதை பிழை என ஆண்டவன் கண்டாலும்
நரகமே நிச்சயம் என்றாலும்ஆஅ
நரகமே நிச்சயம் என்றாலும்
உன்னை அடைந்திட தவித்திடும் பாவியடி

மாற்றான் தோட்டத்து மல்லிகையே
உன் வாசம் என்னை அழைக்குதடி