Narikathai

Narikathai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ம்ம் முன்பு ஒரு காலத்துல
முருக மல காட்டுக்குள்ள
முன்பு ஒரு காலத்துல
முருக மல காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது
அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது
என்ன பன்னிச்சு
ஓடி வந்திச்சி

ம்ம் ஓடி வந்த குள்ள நரி
ஹையையோ ஹையையோ

கால் தவரி வீழ்ந்ததடி
ஓடி வந்த குள்ள நரி
கால் தவரி வீழ்ந்ததடி
நீல நிற சாயம் வெச்ச
தொட்டி ஒன்றிலே
அது நிறம் மாறி போனதடி
சின்ன பொம்பல
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

நரி கலர் மாறி போச்சு
பிறகு காடு தேடி போச்சு
நரி
காடு மாறி போச்சு
ஐயோ அப்புறம்
கலர் தேடி போச்சு
ஹா ஹா ஹா

கெட்டுது போ
கதையே மாத்திபுட்டே
அய்ய என்ன இரு இரு இரு இரு
இன்னும் கதை இருக்கு
வாடா வா தலை எல்லாம்
சரி சொல்லு கதை எங்க விட்டேன்
ம்ம்நரி காடு தேடி போச்சு
காடு தேடி போச்சா

நரி கலர் மாறி
காட்டுக்குள்ளே போச்சா
ஹான்
மத்த மிருகம் எல்லாம்
என்னடா இது
புதுசா ஒரு மிருகம் வந்திருக்குதே
அப்படின்னு பாத்து பயந்து போச்சு
ஐயையோ

ஹஹஹ நான் ஆண்டவன்
அனுப்பிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ
உங்களை ஆள வந்திருக்கும் அரசன்


மிருகங்கள் எல்லாம் பயந்தது
அங்கு நரியின் ராஜ்ஜியம் நடந்தது
ஒரு நாள் மேகம் இடித்தது
மின்னல் வெடித்தது காற்று அடித்தது
காடு துடித்தது நிலம் அசைந்தது
மழை பொழிந்ததுஆஆஆஆ
ஆஆஆஆ

காடு விலங்குகள் கலங்கின
கொஞ்சம் பயந்தன
உடல் நடுங்கின ஆவி ஒடுங்கின
நீல நரியின் வாசல் வந்து
ஓலம் இட்டு அழுதன

உஉஉஆஆஆ
ஏய் நீ ஏன் அழுகுற
நீ ஏன் அழுத
நான் புலி சிங்கம் முயல்
அது மாதிரி அழுதேன்
நீ ஏன் அழுகுற
அப்போ சரி ஹ்ம்ம்சொல்லு

நரியும் வெளியே வந்தது
மழையில் கொஞ்சம் நனைந்தது
நீல சாயம் கரைஞ்சது
நரியின் வேஷம் கலைஞ்சது
ஹஹஹ ஹஹஹ

நீல சாயம் வெளுத்து போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
டும் டும் டும் டும்

ஹான் நீல சாயம் என்ன ஆச்சு
ம்ம் நீல சாயம் வெளுத்து போச்சு
நீல சாயம் வெளுத்து போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
டும் டும் டும் டும்

ஹான் நீல சாயம் வெளுத்து போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு
டும் டும் டும் டும்
காட்ட விட்டே ஓடி போச்சு
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்
ஹஹஹஹஹா