Nenjankuzhi Version 2

Nenjankuzhi Version 2 Song Lyrics In English


இசை அமைப்பாளர் : பிரேம் குமார்

நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

உன் நெனப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும்
வலிக்குதடி

உன்ன விட்டு நான் பிரிஞ்சா
வாழ்க்க அத்து போகும் அழகே
கண்ண விட்டு நீ மறஞ்சா
பார்வை செத்து போகும்

நித்தம் உன்ன எண்ணி எண்ணி
நேரம் வத்திப் போகும் அடியே
சுட்டு விரல் நீண்டு நீண்டு
தூரம் செத்து போகும்

அடி உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு

ஆஹாஆஆ

நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

அடிக்கிற காத்த நிறுத்தி
வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைக போனா
உன்ன பத்தி கேப்பேன்


அடி நீ அங்கே எங்கோ நடக்க
அடி இங்கே என் நிலம் துடிக்க
நீ மண்ணில் கண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாட

அட உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு

நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி



சின்னஞ்சிறு தீவுக்குள்ள
ஜென்மம் தொலயலாமா
என்னை எரிச்சி ஒரு தீபந்தம்
கொழுத்தி இருப்ப காட்டலாமா

அடி என்ன நெஞ்சில் நெனச்சி
உன் மூச்சு காத்த இழுத்து
அதை இங்கே இங்கே அனுப்பு
அதில் எந்தன் ஜீவன் இருக்கு
நீ அங்கே நான் இங்கே

அட உன்மேல் கொண்ட கிறுக்கு
என் உசுருகுள்ள இருக்கு
நீ வருவாய் என்னும் நெனப்பில்
என் வாழ்க்கை தொத்தி கெடக்கு