Ninaithadhu Ellam |
|---|
நினைத்தது எல்லாம்
நடக்கிற வாழ்க்கை யாருக்கு
கிடைக்கிறது பல கனவுகள்
இங்கே கண்ணீர் துளியாய்
கண்ணில் வழிகிறது
விருப்பங்கள் எல்லாம்
தொலைந்த பின்னாலே
வேதனை நிலைக்கிறது
பல திருப்பங்கள் தெரியும்
பாதையில் தானே பயணம்
நடக்கிறது
ஓஹோ ஓஓ மண்
மேலே நாம் எல்லாம் நூல்
பொம்மை போல் தானே விதி
வந்து நம்மை இழுக்கும்
ஓஹோ ஓஓஓ நாம் காணும்
ஆசைகள் தண்ணீரில்
கோலங்கள் ஆனாலும்
நெஞ்சம் நினைக்கும்
நினைத்தது எல்லாம்
நடக்கிற வாழ்க்கை யாருக்கு
கிடைக்கிறது பல கனவுகள்
இங்கே கண்ணீர் துளியாய்
கண்ணில் வழிகிறது
உனக்கும் ஓர் கனவு
அட எனக்கும் ஓர் கனவு
இங்கே கனவுகள்
இணைவதில்லையே
இருளில் தினம் தொலையும்
ஒரு நிழல் போலே சொந்தம்
இங்கே சூழ்நிலைகள்
புரிவதில்லையே
இந்த உறவுகள்
என்பது விடுகதை அது
முடிவின்றி தொடர்ந்திடும்
தொடர்கதை
இங்கு உணர்வுகள்
என்பது சித்ரவதை அது
தூண்டிலில் புழுவென
சிக்கும் வதை
புயல் மழை வரும்
ஒரு புறம் வெயில் வரும்
மறுபுறம் இன்பம் துன்பம்
இரண்டும் இணைந்து
ஆட்டிவைக்கும்
வாழ்க்கையடா ஆ
நதியில் வந்து
மிதக்கும் ஓர் இலை
போலே வாழ்க்கை இங்கே
செல்லும் திசை தெரிவதில்லையே
இறைவன் அட அன்றே நம்
வழி பாதை எழுதி வைத்தான்
திருப்பங்கள் புரிவதில்லையே
இந்த வாழ்க்கையின்
பயணமோ சிறியது அதில்
கிடைத்திடும் அனுபவம்
பெரியது
இங்கு எதுவுமே
இல்லை உன்னது இதில்
வருத்தத்தில் தோய்வது
என்னது
புயல் மழை வரும்
ஒரு புறம் வெயில் வரும்
மறுபுறம் இன்பம் துன்பம்
இரண்டும் இணைந்து
ஆட்டிவைக்கும்
வாழ்க்கையடா ஆ
நினைத்தது எல்லாம்
நடக்கிற வாழ்க்கை யாருக்கு
கிடைக்கிறது பல கனவுகள்
இங்கே கண்ணீர் துளியாய்
கண்ணில் வழிகிறது
விருப்பங்கள் எல்லாம்
தொலைந்த பின்னாலே
வேதனை நிலைக்கிறது
பல திருப்பங்கள் தெரியும்
பாதையில் தானே பயணம்
நடக்கிறது
ஓஹோ ஓஓ மண்
மேலே நாம் எல்லாம் நூல்
பொம்மை போல் தானே
விதி வந்து நம்மை இழுக்கும்
ஓஹோ நாம் காணும்
ஆசைகள் தண்ணீரில்
கோலங்கள் ஆனாலும்
நெஞ்சம் நினைக்கும்
ஓஹோ ஓஓ
நினைத்தது எல்லாம்
நடக்கிற வாழ்க்கை யாருக்கு
கிடைக்கிறது பல கனவுகள்
இங்கே கண்ணீர் துளியாய்
கண்ணில் வழிகிறது