O Maina O Maina

O Maina O Maina Song Lyrics In English


ஓ மைனாஓ மைனா
ஓ மைனாஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா

மானல்லடா இது
தேனல்லடா இது

ஆம்

முன்னுரையை நீ எழுத
முடிவுரையை நான் எழுத

இப்பப் புரியுதா

நம் உறவை ஊர் அறிய
நான் தரவா நீ தரவா

கேளடா ராஜா
காகிதப்பூ மணக்காது
கள்ளிப்பால் சுவைக்காது
எட்டிக்காய் இனிக்காது

சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சியைத்தான் மாற்றி விட்டேன்
காட்சியைத்தான் திருப்புகின்றேன்
ஹஹஹா இடமென்ன பயமென்ன
இதிலென்ன தொடரட்டுமே


ஓ மைனாஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா

ராஜா
உன் கிளியை நீ அணைத்தால்
என் கனியை நான் சுவைப்பேன்

பெண்ணுக்கும் பேய்க்கும்
பேதம் தெரியலையா வேண்டாண்டா

ஊரறியக் கொஞ்சுவது
உனக்கிருந்தால் எனக்கில்லையோ

நெருப்பில் குளிக்கலாமா
ஆபத்தை ரசிக்கலாமா
ஊர் சிரிக்கப் பண்ணாதேடா

காதலெல்லாம் உண்மைதானே
காண்பதெல்லாம் பெண்மைதானே
காதலெல்லாம் உண்மைதானே
காண்பதெல்லாம் பெண்மைதானே
கண்களுக்குள் பேதமென்ன
காலமென்ன நேரமென்ன
கிடைப்பது கிடைக்கட்டும்
இனிப்பது இனிக்கட்டுமே

ஓ மைனாஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா