Oru Killi Oru Killi

Oru Killi Oru Killi Song Lyrics In English


ஒரு கிளி ஒரு
கிளி சிறு கிளி உன்னை
தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி வழிகிறதே
விழி வழி

உனக்குள் நான்
வாழும் விவரம் நான்
கண்டு வியக்கிறேன்
வியர்க்கிறேன்

எனக்கு நான்
அல்ல உனக்கு தான்
என்று உணர்கிறேன்
நிழல் என
தொடர்கிறேன்

ஒரு கிளி ஒரு
கிளி சிறு கிளி உன்னை
தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி வழிகிறதே
விழி வழி

விழி அல்ல
விரல் இது ஓர் மடல்
தான் வரைந்தது உயிர்
அல்ல உயில் இது
உனக்கு தான் உரியது

இமைகளின் இடையில்
நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்

காதல் தான்
எந்நாளும் ஒரு
வார்த்தைக்குள் வராதது

காலங்கள்
சென்றாலும் அந்த
வானம் போல் விழாதது

ஒரு கிளி
ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி


தூரத்து மேகத்தை
துரத்தி செல்லும் பறவை
போலே தோகையே உன்னை
நான் தேடியே வந்தேன் இங்கே

பொய்கையை போல்
கிடந்தவள் பார்வை என்னும்
கல் எறிந்தாய் தேங்கினேன்
உன் கையில் வழங்கினேன்
இன்றே

தோழியே உன்
தேகம் இளம் தென்றல்
தான் தொடாததோ

தோழனே உன்
கைகள் தொட நாணம்
தான் விடாததோ

ஒரு கிளி
ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

உனக்குள் நான்
வாழும் விவரம் நான்
கண்டு வியக்கிறேன்
வியர்க்கிறேன்

எனக்கு நான்
அல்ல உனக்கு தான்
என்று உணர்கிறேன்
நிழல் என
தொடர்கிறேன்

ஆண் & ஒரு கிளி ஒரு
கிளி சிறு கிளி உன்னை
தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி வழிகிறதே
விழி வழி