Paarthathenna Paarvai

Paarthathenna Paarvai Song Lyrics In English


பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே

பளிங்கு மேனியில்
ஒரு பவள வீதியோ
பவள வீதியில்
ஒரு பருவத் தோணியோ

இது போதும் போதும் கண்ணா
பார்த்ததென்ன
பார்வை என்னை வாட்டுதே
பார்த்ததென்ன

முத்து நவரத்தினங்களை
முன்னாலே கொட்டி வைத்த அற்புதங்களோ
கொத்து மலர் சித்திரங்களின்
முன்னாலே தொட்டு வைத்த கற்பனைகளோ

அரங்கம் உடலானதே
அதிலே நடனம்
சுரங்கம் கடலானதே
சுகமோ நளினம்
ராஜராஜன் கோவிலே
அதில் ராகம் தாளம் கூடுதே
தேடி ஓடும் ஆவலே
ஒரு தேவ ராகம் பாடுதே
வாடிடாது பூவிலே
ஒரு மேடை போட்டுக் கூடவா

பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே

  பளிங்கு மேனியில்
ஹ்ஹான்
ஒரு பவள வீதியோ
ஹஹஹா
பவள வீதியில்
 ஹான்
ஒரு பருவத் தோணியோ


இது போதும் போதும் கண்ணே
பார்த்ததென்ன
பார்வை என்னை வாட்டுதே
பார்த்ததென்ன

விட்டு விட சித்தம் வருமோ
கண்ணாலே தொட்டு விட
சொர்க்கம் வருமோ
கட்டிக் கொண்டு
முத்தம் தருமோ
கட்டாமல் விட்டு விட
வெட்கம் வருமோ

இதழே ஒரு தேன் குடம்
இதயம் உலகம்
அமுதே பரிமாறிடும்
அழகே உதயம்
தேகம் என்னும் ஏட்டிலே
எழுத்தாணி போலே மாறவா
மோகம் சொல்லும் பாட்டிலே
முடியாத ஒன்றை கூறவா
தாகம் தீர்க்கும் பானமே
இது காதல் என்னும் தியானமே

பார்த்ததென்ன பார்வை
என்னை வாட்டுதே
கேட்டதென்ன கேள்வி
இன்பம் ஊட்டுதே

பளிங்கு மேனியில்
ஹ்ஹ்ம்ம்
ஒரு பவள வீதியோ
ஹாஹா
பவள வீதியில்
ஹ்ம்ம்
ஒரு பருவத் தோணியோ

இது போதும் போதும் கண்ணா
பார்த்ததென்ன
பார்வை என்னை வாட்டுதே
கேட்டதென்ன
கேள்வி
இன்பம் ஊட்டுதே
ஆண் மற்றும் பார்த்ததென்ன