Panpaadum Thaamaraiye

Panpaadum Thaamaraiye Song Lyrics In English


பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி

பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி

மயக்கம் கொண்டிருக்கும்
உன் இசைக்கும் உனக்கும் வணக்கம்
எனக்கும் உன் மயக்கம்
உன் இதயம் இசையின் இயக்கம்

கண்ணிலே போவது மின்னல்தானோ
சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ
ஆஆஆஆஆனந்தமேவா வா
பூலோகமே உன் பாட்டில் தேனாகுமே

பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி


இதற்கா சம்மதித்தேன்
உன் மனதை உயர்வாய் மதித்தேன்
அதற்கா நான் கொடுத்தேன்
உன் இசைக்கே பிறவி எடுத்தேன்

பொங்கித்தான் போனது கன்னித் தேனே
அன்பினால் நானுன்னை மன்னித்தேனே
ஆஆஆஆஆனந்தமேவா வா
காமன் நிலா வந்தாடும் காதல் விழா

பண்பாடும் தாமரையே வா வா
இசையில் விளையும் தேமாங்கனி
உன் பார்வை பூவின் பனி