Pathu Rooba Ravikkai |
|---|
ஆஅஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅஆஆ
பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா
உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா
ஹொய் பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஏ பச்சப் பாசி பல்லழகி
நீ பம்பரத்து கண்ணழகி
அச்சடிச்ச முத்தழகி
அத்த பெத்த பொன்னழகி
ஒன்ன விட்டு எங்க போவேண்டி
ஏ வெள்ளரிக்கா மூக்கழகா
ஏ வெங்கலத்து பேச்சழகா
வெட்டருவா மீசை வெச்சு
வீச்சருவா கையில் வெச்சு
கிட்ட வந்தா ஆசை வருமா
ஏன்டி மொறைக்கிற
என்னாடி என் கொற
என்ன விட்டு எங்க ஓடுற
நீ வீணா பசப்புற
வீராப்பா பேசுற
வேலையத்த வேல செய்யுற
என்ன பாத்தா எதுக்குற
நீயா ஒதுக்குற
அப்பறமும் எனக்கு சலிக்கல
என்ன பாடா படுத்துற
மாடா நடத்துற
துப்புரவா எனக்குப் புடிக்கல
பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
ஏ கண்ணாடி வளவி போட்டு
ஒன் காலுக்கு கொலுசு போட்டு
ஒன்னோட ஒடம்பெல்லாம்
பொன்னால நான் போத்துறேன்
என்னோட நீ வாடி ராசாத்தி
என்னோட தகப்பன் சொல்ல
நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்
யாருக்கும் தெரியாம
ஒன்னோட நான் வந்தாக்கா
மானம் கெடும் நான் வர மாட்டேன்
என் கண்ணா மதிக்கிறேன்
பொன்னா எழக்கிறேன்
சொன்னாக் கேளு என்னோட பேச்ச
நல்லாவே பேசுற
என்ன நீ ஏய்க்கிற
ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்
அய்யோ கஞ்சி குடிக்கல
கண்ணு மூடி தூங்கல
கட்டழகி நெனப்பு போகல
என் நெஞ்சு பொறுக்கல
நேசம் மறக்கல
ஒன்ன விட்டு வேற தேடல
பத்து ரூவா லவுக்கத் துணி
பட்டணத்து சிலுக்குத் துணி
பக்குவமா எடுத்துத் தரேன்
பக்கத்துல வாடி
கம்பிக் கறை வேட்டி கட்டி
கக்கத்துல கொட இடுக்கி
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்
சம்மதிக்க மாட்டேன்
அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா
அடி பஞ்சவர்ணம்
எம் மேலதான் ஆசை வல்லையா
உன் சூட்சுமம்தான்
என் கிட்ட நடக்குமா
கொஞ்சம் சூதானமா
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா