Ponna Pola

Ponna Pola Song Lyrics In English


உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது

உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா

ஓஓஓஓஹோஓஒஓஒ
திட்டித்திட்டி பேசினாலும்
வட்டியிலே சோறு வைப்பா
ஒட்டிப் போன ஒடம்புனாலும்
உசுர விட்டு பாசம் வைப்பா

தின்ன வாயில் திட்டினாலும்
என்னை அவ நொந்ததில்லை
கந்தல் துணி கட்டினாலும்
கண் கசங்க பார்த்ததில்லை

பொன்னைக் கேட்கும் வாயில்
ஒரு சேலை கேட்ட ஆத்தா
நூலை கூட நானும்
உனக்கு வாங்கி தந்ததில்லை
அடி ஆத்தாஆஆஆஹாஹா ஹா ஹா

உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா


வெட்டியில ஊர சுத்தும்
வேலையத்த மகனும் உண்டு
வெட்டி பய என்னைப்போலே
எத்தனையோ பேரும் உண்டு

கெட்டு போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு

கெட்டு போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டு போன தாயி எங்கும் இல்லவேயில்லை
அடிஆத்தாஆஆஅஆஅஹாஹா ஹா ஹா

உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது

உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா