Roja Rathirikku Poothirukku |
|---|
ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு
காத்திருக்கு தேனாட வாஆ
வா வா பள்ளியறை மல்லிகையை
அள்ளி வைத்து கொண்டாட வாஆ
ஆஹா பாலாடை தேகத்தில்
மேலாடை நீயாக வா
மாப்பிள்ளையே கள்ளூறும்
முல்லை மொட்டில் முள்ளில்லையே
என்னோடு பின்னிக் கொண்டு
தோளோடு தோள் சேர்க்க
நீயின்றி ஆளில்லையேஏ
என்னைப் போன்று இசைபாடி
எங்கும் பார்த்ததுண்டா
தப்பிக் கொண்டு சென்றாலும்
தட்டி கேட்பதுண்டா
பூச்சூட நாளில்லையாஆ
ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு
காத்திருக்கு தேனாட வாஆ
வா வா பள்ளியறை மல்லிகையை
அள்ளி வைத்து கொண்டாட வாஆ
ஆஹா பாலாடை தேகத்தில்
மேலாடை நீயாக வா
தேன் பார்க்கவா உன்னை நான்
தட்டிச் செல்ல நாள் பார்க்கவா
சிங்கார காதல் கண்ணா உன் மீது
கண் வைத்தேன் என் எண்ணம் ஈடேறுமோஆ
கொத்தும் என்று எண்ணாதே
கட்டி போடு என்னை
இஷ்டம் போல உட்கார
இங்கே உண்டு திண்ணை
என்னாசை தேடும் உன்னை
ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு
காத்திருக்கு தேனாட வாஆ
வா வா பள்ளியறை மல்லிகையை
அள்ளி வைத்து கொண்டாட வாஆ
ஆஹா பாலாடை தேகத்தில்
மேலாடை நீயாக வாஆ