Shenbagame Shenbagame (Male Version)

Shenbagame Shenbagame (Male Version) Song Lyrics In English


பட்டுப் பட்டு
பூச்சி போல எத்தனையோ
வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்

கட்டி வைக்கும்
என் மனச வாசம் வரும்
மல்லிகையும் தொட்டுத்
தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகமே

செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே

செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே

உன் பாதம்
போகும் பாதை நானும்
போக வந்தேனே உன்
மேலே ஆசைப்பட்டு
பார்த்து காத்து
நின்னேனே

உன் முகம்
பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா
பாடிடலாச்சு

என்னோட
பாட்டு சத்தம் தேடும்
உன்னை பின்னால
எப்போதும் உன்ன தொட்டு
பாடப்போறேன் தன்னால

செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே


செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே

மூணாம்பிறையைப்
போல காணும் நெத்திப்
பொட்டோட நாமும்
கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட

கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ

எள்ளுக்கும்
ராசி பத்திப் பேசிப்
பேசி தீராது
உன்பாட்டுக்காரன்
பாட்டு உன்ன விட்டுப்
போகாது

செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே

செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே