Sirikka Therindhaal Podhum |
|---|
மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
வனத்துக்கு அழகு
பசுமை
வார்த்தைக்கு அழகு
இனிமை
குளத்துக்கு அழகு
தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
உறவை வளர்ப்பது
அன்பு
மன நிறைவைத் தருவது
பண்பு
பொறுமையை அளிப்பது
சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது களிப்பு
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்