Ulagam Idhilae |
|---|
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருது தீருது
அச்சுக் கலையால் நிலைமை மாறுது
கலகம் வருது தீருது
அச்சுக் கலையால் நிலைமை மாறுது
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பலனில்லே
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பலனில்லே
அதை மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே
மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
சினிமாக் ஸ்டாருங்க படங்களைப் போட்டா
தெருவில் பேப்பர் கிடைக்கல்லே
சினிமாக் ஸ்டாருங்க படங்களைப் போட்டா
தெருவில் பேப்பர் கிடைக்கல்லே
அதில் சிரிப்புக் கார்ட்டூன் காதல் கேசுகள்
சேர்த்தால் பிசினஸ் மொடையில்லே
சிரிப்புக் கார்ட்டூன் காதல் கேசுகள்
சேர்த்தால் பிசினஸ் மொடையில்லே
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
காதல் கதைகள் படிப்பதற்கென்றே
வாலிபர் கூட்டம் வாங்குது
காதல் கதைகள் படிப்பதற்கென்றே
வாலிபர் கூட்டம் வாங்குது
அந்தக் கதையிலே வருவதை
மனசில நெனச்சி ராத்திரி பகலா ஏங்குது
கதையிலே வருவதை
மனசில நெனச்சி ராத்திரி பகலா ஏங்குது
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருது தீருது
அச்சுக் கலையால் நிலைமை மாறுது
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது