Unakaaga Poojai Seidha

Unakaaga Poojai Seidha Song Lyrics In English


உனக்காக பூஜை செய்த பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக் கோவில் தேவியே
நீதான் என் ஆவியே

கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ

எனக்காக பூஜை செய்த
பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த
பித்தனம்மா
மனக் கோவில் தேவியோ
நான்தான் உன் ஆவியோ

கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ

நாலிலொன்று நாணமென்று
நானறிந்த பாடமொன்று மறந்தே போகுமா
பாலிருக்கும் பாத்திரத்தை
நூலிருக்கும் ஆடை கொண்டு மறைத்தாலாகுமா

நள்ளிரவில் மெல்ல மெல்ல அள்ளியதென்ன
மன்மதனின் மந்திரத்தை சொல்லியதென்ன
அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா
அணைக்காமல் காதல் வேகம் அடங்காதம்மா

எனக்காக பூஜை செய்த
உறங்காமல் ஆசை வைத்த
மனக் கோவில் தேவியோ
நான்தான் உன் ஆவியோ


கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ

வாலிபத்தின் லீலை காண காலையென்ன
மாலையென்ன அணைத்தேன் ஓடி வா
கால் நடக்கும் ஓவியத்தை கையணைக்க
மெய்யணைக்க துடித்தால் போட வா

கட்டழகு பெட்டகத்தை கட்டிக் கொள்ளவா
கிட்ட வந்து அட்டையென ஒட்டிக் கொள்ளவா
அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே
அதற்கான நேரம் ஒன்று வரக்கூடுமே

உனக்காக பூஜை செய்த பக்தனம்மா
உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா
மனக் கோவில் தேவியே
நீதான் என் ஆவியே

கட்டுக் கூந்தல் காற்றிலாட
பட்டுப் பூவும் தேனிலாட
கண் படாதோ
அம்மம்மா கைத் தொடாதோ
உல்லாசம் பொங்கிடாதோ