Unmai Orunaal Veliyaagum |
|---|
உண்மை ஒருநாள் வெளியாகும்
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
பொறுமை ஒருநாள் புலியாகும்
பொறுமை ஒருநாள் புலியாகும்
அதற்கு பொய்யும் புரட்டும் பலியாகும்
பொய்யும் புரட்டும் பலியாகும்
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
உண்மை ஒருநாள் வெளியாகும்
காலம் தெரிந்து கூவும் சேவலை
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
காலம் தெரிந்து கூவும் சேவலை
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும்
கணக்காய் கூவும் தவறாது
கணக்காய் கூவும் தவறாது
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
உண்மை ஒருநாள் வெளியாகும்
தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது
தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது
சத்தியத்தை உலகில் எவனும்
சதியால் மறைக்க முடியாது
சதியால் மறைக்க முடியாது
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
உண்மை ஒருநாள் வெளியாகும்
அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்
அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்
அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால்
பிறவிக் குருடனும் கண் பெறுவான்
பிறவிக் குருடனும் கண் பெறுவான்
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
உண்மை ஒருநாள் வெளியாகும்