Vanakkam Vanakkam Aiyaa Ammaa

Vanakkam Vanakkam Aiyaa Ammaa Song Lyrics In English


வணக்கம் வணக்கம்
ஐயா அம்மா உங்க அபயம்
வணக்கம் வணக்கம்
ஐயா அம்மா உங்க அபயம்
அணைக்கும் கையால் தள்ளாதீங்க
இந்த சமயம்
வணக்கம் வணக்கம்
ஐயா அம்மா உங்க அபயம்

வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு
வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு
வாழுவது உங்க கையில் தானிருக்கு
வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு
வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு
வாழுவது உங்க கையில் தானிருக்கு

வணக்கம் வணக்கம்
ஐயா அம்மா உங்க அபயம்

பற்றிப் படர வந்த பச்சைப்
பசுங்கொடியைப்
பந்தலே தள்ளுவதும் சரியா
பற்றிப் படர வந்த பச்சைப்
பசுங்கொடியைப்
பந்தலே தள்ளுவதும் சரியா

பெற்றவர்கள் தங்கள்
பிள்ளைகள் குறைகளைப்
பெரிதாய் கொள்ளுவது முறையா
பெற்றவர்கள் தங்கள்
பிள்ளைகள் குறைகளைப்
பெரிதாய் கொள்ளுவது முறையா

வணக்கம் வணக்கம்
ஐயா அம்மா உங்க அபயம்


அண்ட நிழல் தேடி வரும்
நொண்டிகளை
ஆல மரம் அடித்தே விரட்டுவதும் உண்டோ
வந்தவரை வாழ வைக்கும்
வசதி படைத்தவங்க
தண்டனைகள் தருவதும் நன்றோ

கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்கதான் எங்களுக்கு
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்கதான் எங்களுக்கு

வணக்கம் வணக்கம்
ஐயா அம்மா உங்க அபயம்
அணைக்கும் கையால் தள்ளாதீங்க
இந்த சமயம்
வணக்கம் வணக்கம்
ஐயா அம்மா உங்க அபயம்

வணக்கம் வணக்கம்
ஐயா அம்மா உங்க அபயம்