Veredhuvum Nijamae Illai

Veredhuvum Nijamae Illai Song Lyrics In English


வேறெதுவும்
நிஜமே இல்லை நாம்
இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே
இல்லை நாம் இருவர்
கனவே

வழியும் துளிகள்
நிஜமா இல்லை துடைக்கும்
விரலோ நிஜமே இதழின்
முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே

உயிரே உயிரே
விழியோ நிஜமே அழகே
அழகே இமைதான் கனவே

இரவாய் திறவாயடி

வேறெதுவும்
நிஜமே இல்லை நாம்
இருவர் நிஜமே ஹே


இருளிலே புதைகிறாய்
ஒளியென வருகிறேன்
ஒலியிலே தொலைகிறாய்
அமைதியை தருகிறேன்

எதனால் விழியில்
மயக்கம் எதனால் மனதில்
தயக்கம் உறவே உறவே
சிறகோ நிஜமே இணையே
இணையே வானோ கனவே
பறவாயடி பறவாயடி

வேறெதுவும்
நிஜமே இல்லை நாம்
இருவர் நிஜமே

வழியும் துளிகள்
நிஜமா இல்லை துடைக்கும்
விரலோ நிஜமே இதழின்
முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே

Tags