Vizhigal Meeno |
|---|
ஆஆஆஆ
ஹாஆஅஆஆஹாஆ
ஹாஆஹாஆஹாஆஅஹா
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
குழலில் மேகம் குடியிருந்தாலும்
விழியில் ஏதோ புது வித தாகம்
பௌர்ணமி பார்வை பொழிகிறதே
மனம் தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்
இடையின் பாகம் நூலாகும்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ
நிஸ நிரிதம கம தமக
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
ஸநி ரிஸ்ஸா நீதா பாமா க
ரீரீ ரீரீ
நிரிக்கா ரிக்கா காம தாஸ
நீநீ நீநீ
ஸா நிரிநீ தக தகிட தகதிமி
நீத ஸாநி
தகததி தக ததிமி
தத் தரிகிட தா தத் தகஜுணு தா
தத் தரிகிட தா தத் தகதிமி தா
அடடா கால்கள் அழகிய வாழை
நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
இவள் தான் இங்கே கலை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம்
நாயகி பாதம் நாயகன் வேதம்
நீயே காதல் தேவாரம்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓ ஓ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ