Kannaruge Velli Nila

Kannaruge Velli Nila Song Lyrics In English


கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ

கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா

அருவியைப்போல் தவழுந்து வரும்
இளநடை தென்றல் எனும் மாமன் தந்ததோ
பனி இதழ்கள் மடல் விரிக்கும் குளிர்நகை
திங்கள் என்னும் அத்தை தந்ததோ

பம் சிக்க பம் சிக்க பம் யா
பம் சிக்க பம் சிக்க பம்

சொல்லு காலை வணக்கம் குட் மார்னிங்
நாளும் வணங்குவது மிக நல்ல வழக்கமது
இன்று ஆறில் வந்த பழக்கம்தானே நூறில் வருவது
கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ

கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா


அழகு தமிழ் அகர முதல
எழுதுக கண்ணே உந்தன் அன்னை மகிழவே
அறிவுலகம் உன்னை புகழும்
பெருமைகள் அன்றும் இன்றும் என்றும் வளரவே

கற்று தெளிந்தவர்க்கு
நல்ல கல்வி அறிந்தவர்க்கு
எதிர்காலம் இருக்கு
உச்சி முகர்ந்திடவோ உன்னை அணைத்திடவோ
பட்டுக் கிளியைப்போல பறந்து வந்த
பிள்ளைக் கனியமுதோ

கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா
சிறுப்பிள்ளை மேனி முல்லை பூவின் இனமோ
மலர்த் தேன்தான் உன் கன்னமோ

கண்ணருகே வெள்ளி நிலா
கையருகே வண்ணப்புறா