Vidiyum Vidiyum

Vidiyum Vidiyum Song Lyrics In English


விடியும் விடியும் என்றிருந்தோம்
இது முடியும் பொழுதாய் விடிந்ததடா
விடியும் விடியும் என்றிருந்தோம்
இது முடியும் பொழுதாய் விடிந்ததடா

கொடியும் முடியும் தாழ்ந்ததடா
குடியும் குலமும் ஒய்ந்ததடா

விடியும் விடியும் என்றிருந்தோம்
இது முடியும் பொழுதாய் விடிந்ததடா

பெற்றெடுத்த பெருமையிலே
நான் சிரித்தேன்
பிறந்து வந்த வேளையிலே
நீ அழுதாய்
இன்று உயிர் வளர்த்த பாசத்தால்
அழுகின்றேன் நான்
ஓடுகின்ற வேகத்தில் சிரிக்கின்றாய் நீ

அழிப்போர் வருவார் தளராதே
அவரும் அழிவார் ஒரு நாளே
அழிப்போர் வருவார் தளராதே
அவரும் அழிவார் ஒரு நாளே
தழைக்கும் மறவர் சமுதாயம்
தமிழர் பெறுவார் எதிர்காலம்
தழைக்கும் மறவர் சமுதாயம்
தமிழர் பெறுவார் எதிர்காலம்


விடியும் விடியும் என்றிருந்தோம்
இது முடியும் பொழுதாய் விடிந்ததடா

நோய் நொடியால் மாண்டவர்கள்
கோடி கோடி
அவரில் நூற்றிலொரு பெயர் நினைவும்
நாட்டிலில்லை
தாய்நாடு வாழ்கவென
மடிந்த வீரர்
சரித்திரத்தில் பொன் எழுத்தாய்
நிலைத்து நிற்பார்

உலகம் போற்றும் பெருமையடா
உனையும் வந்து அழைக்குதடா
காலடி ஓசை கேட்குதடா
காலடி ஓசை கேட்குதடா
கண்ணே துணிந்து சென்றிடடா

பாலூட்டி வளர்த்த கிளி
பறந்ததம்மா
பசுங்கன்று திசை மாறிப்
பிரிந்ததம்மா
தாவி வரும் மான் கன்று
வீழ்ந்ததம்மா
தாய்த் தமிழே பகைவர்களை
மன்னிப்பாயே
தாய்த் தமிழே பகைவர்களை
மன்னிப்பாயே