Andhiyile Vaanam

Andhiyile Vaanam Song Lyrics In English


அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும் ஹோய்

அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
ஓஒஓஒ

பட்டுடுக்க தேவையில்ல
முத்துமணி ஆசை இல்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
ஓஒஓஒ

பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு
தூங்காத விருந்து

நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும்
பாடும் பாட்டல்லோ ஹோ

அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்


வெள்ளி அலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா
ஆஆஅஆஅ

மல்லியப்பூ மாலை கட்ட
மாலையிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
ஆஆஅஆஅ

கடலோரம் காத்து
ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன்
ஆளான நான்தான்
தோளோடு நான் சேர
ஊறாதோ தேன்தான்

தேகம் ரெண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று
கூடும் இன்றல்லோ

அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும்

அந்தியில வானம்
ஹா
தந்தனத்தோம் போடும்
ஹான் ஹா
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும்
ஹோய்
சுந்தரியைப் பாரும்
ஆஹா
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்