Nee Thaan Selvam Nee Thaan Amudham

Nee Thaan Selvam Nee Thaan Amudham Song Lyrics In English


நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீதான் எந்தன் உலகம்ம்ம்ம்

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்

வாவென்றேன் உன்னை
வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை
தந்தாய் என் கண்ணே

வாவென்றேன் உன்னை
வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை
தந்தாய் என் கண்ணே

கண்ணுக்குள் மணியாய்க்
கலந்தே நீ வாழ்க
மண்ணுக்கு புகழாய்
மகனே நீ வாழ்க

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்

தோட்டத்துக் கொடிக்கு
பூவால் சிறப்பு
வாழும் வீட்டுக்கு
ஏற்றும் விளக்கால் சிறப்பு

தோட்டத்துக் கொடிக்கு
பூவால் சிறப்பு
வாழும் வீட்டுக்கு
ஏற்றும் விளக்கால் சிறப்பு

பாட்டுக்குப் பொருளின்
நயத்தால் மதிப்பு
பசு மாட்டுக்குப் பிறந்த
கன்றால் மதிப்பு


கொடி தந்த பூவாய்
பூ தந்த மணமாய்
மடி மீது வளர்ந்தாய்
மகனே நீ வாழ்க

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்

கண் பார்க்கும் இடத்தில்
நீ தான் இருப்பாய்
எந்தன் கை தீண்டும் பொருளில்
நீ தான் இருப்பாய்

கண் பார்க்கும் இடத்தில்
நீ தான் இருப்பாய்
எந்தன் கை தீண்டும் பொருளில்
நீ தான் இருப்பாய்

பண் சேர்த்துப்
பாடும் பாட்டில் இருப்பாய்
நான் பார்க்கின்ற எதிலும்
நீ தான் இருப்பாய்

அன்புக்கு வடிவாய்
பண்புக்குப் பொருளாய்
இன்பத்தின் சுவையாய்
என்றென்றும் வாழ்க

நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்