Koondai Vittu

Koondai Vittu Lyric In English


கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே

கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து
கண்டதென்ன வாழ்க்கையிலே

பார்வையில் யாருமே
மனித ஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர்
மிருக ஜாதிதான்

கூண்டை விட்டு
வெளியில் வந்து

நான் வளர்க்கும் பூச்செடியில்
முட்கள் மட்டும் பூப்பதென்ன
பாவமா சாபமா காலத்தின் கோலமா

கால் நடக்கும் பாதை எல்லாம்
கற்கள் குத்தி வலிப்பதென்ன
யார் இதன் காரணம்
தெய்வம்தான் கூறணும்

வைரக் கல்லை
நான் கொடுத்தால்
வாங்கிக் கொள்ளும் உலகமே
உப்புக் கல்லை எனக்களித்து
ஒப்புக் கொள்ளச் சொல்லுமே

நெய்யை விட்டு
தீபம் ஏற்றினால்
கையைச் சுட்டு நன்றி
காட்டுதே ஓ

கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து
கண்டதென்ன வாழ்க்கையிலே

பார்வையில் யாருமே
மனித ஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர்
மிருக ஜாதிதான்


கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே

தெய்வத்துக்கு ஆறு முகம்
மானிடர்க்கு நூறு முகம்
மெய் எது பொய் எது
யார் அதைக் கண்டது

பாலும் இங்கு வெள்ளை நிறம்
கள்ளும் இங்கு வெள்ளை நிறம்
பால் எது கள் எது
பேதம் யார் கண்டது

நேசம் வைத்த யாருக்குமே
நெஞ்சம் எல்லாம் காயம் தான்
பாசம் வைத்த கண்களிலே
பார்ப்பதெல்லாம் மாயம்தான்

ஏறிச் சென்ற
கால்கள் உதைக்குது
ஏற்றி விட்ட ஏணி சிரிக்குது ஓ

கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே

கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே
அன்பு எனும் பாட்டிசைத்து
கண்டதென்ன வாழ்க்கையிலே

பார்வையில் யாருமே
மனித ஜாதிதான்
பழகிப் பார் பாதிப் பேர்
மிருக ஜாதிதான்

கூண்டை விட்டு
வெளியில் வந்து
கூவுகின்ற பூங்குயிலே


Koondai Vittu Veliyil Vandhu
Koovugindra Poonguyilae
Koondai Vittu Veliyil Vandhu
Koovugindra Poonguyilae
Anbu Ennum Paattisaithu
Kandadhenna Vaazhkkayilae
Paarvaiyil Yaarumae
Manidha Jaadhi Thaan
Pazhagi Paar Paadhi Per
Miruga Jaadhi Thaan

Koondai Vittu Veliyil Vandhu

Naan Valarkkum Poo Chediyil
Mutkal Mattum Pooppadhenna
Paavamaa Saabamaa Kaalathin Kolamaa
Kaal Nadakkum Paadhai Ellaam
Karkal Kuthi Valippadhenna
Yaar Idhan Kaaranam
Dheivam Thaan Kooranum
Vaira Kallai Naan Koduthaal
Vaangi Kollum Ulagamae
Uppu Kallai Enakkalithu
Oppu Kolla Chollumae
Neiyai Vittu Dheepam Yetrinaal
Kaiyai Chuttu Nandri Kaattudhae O

Koondai Vittu Veliyil Vandhu
Koovugindra Poonguyilae
Anbu Ennum Paattisaithu
Kandadhenna Vaazhkkayilae
Paarvaiyil Yaarumae
Manidha Jaadhi Thaan
Pazhagi Paar Paadhi Per
Miruga Jaadhi Thaan

Koondai Vittu Veliyil Vandhu
Koovugindra Poonguyilae


Dheivathukku Aaru Mugam
Maanidarkku Nooru Mugam
Mei Yedhu Poi Yedhu
Yaar Adhai Kandadhu
Paalum Ingu Vellai Niram
Kallum Ingu Vellai Niram
Paal Yedhu Kal Yedhu
Baedham Yaar Kandadhu
Naesam Vaitha Yaarukkumae
Nenjam Ellaam Kaayam Thaan
Paasam Vaitha Kangalilae
Paarppadhellaam Maayam Thaan
Yeri Chendra Kaalgal Udhaikkudhu
Yetri Vitta Yeni Sirikkudhu

Koondai Vittu Veliyil Vandhu
Koovugindra Poonguyilae
Koondai Vittu Veliyil Vandhu
Koovugindra Poonguyilae
Anbu Ennum Paattisaithu
Kandadhenna Vaazhkkayilae
Paarvaiyil Yaarumae
Manidha Jaadhi Thaan
Pazhagi Paar Paadhi Per
Miruga Jaadhi Thaan

Koondai Vittu Veliyil Vandhu
Koovugindra Poonguyilae

Koondai Vittu Song Lyrics From Ethir Kaatru | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies