Kaalam Pala Kathirunthom

Kaalam Pala Kathirunthom Lyric In English


காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே

காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே

காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே

ஓராயிரம் கோடி உயர்ந்தாலும் உன்னை ஒருநாளும் மறவாமல் பணி செய்வோம் கண்ணா தோன்றாமல் தோன்றி பரிசாக வந்தாய் சுகமான வாழ்வொன்று அருள் செய்தாய் மன்னா

ஆகாயம் எட்டும் வண்ணம் புகழ் வந்த போதும் அகங்காரம் என்றுமில்லை பணிவுண்டு கண்ணா

காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே

பருவத்தில் தெய்வங்கள் தரும் எண்ணும்போது பரந்தாமன் அருளின்றி நல்வாழ்வு ஏது ஊர் வந்து உறவென்று உறவாடும் நேரம் ஓர் சொல்லில் அடங்காது நீ தந்த வாழ்வு


மாணிக்கப் பந்தலிட்டு மனைக் கட்டினாலும் காணிக்கை உனக்குண்டு கண்ணான கண்ணா

காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே

தாயென்றும் சேயென்றும் சந்தோஷப் பாட்டு தந்தைக்கு நீ தந்த நல்வாக்குச் சீட்டு பட்டாடை நகையென்று பிள்ளைக்கு போட்டு பார்க்கின்ற சுகந்தன்னை நிலையாக்கிக் காட்டு

மாங்கல்யம் தந்த தெய்வம் பல்லாண்டு வாழ மங்காத அருள் வேண்டும் நவநீதக் கண்ணா

காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே

காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே


Kaalam Pala Kaaththirunthom
Kanna Perumaanae
Karpanaiyil Vaazhnthirunthom
Kanna Perumaanae
Kaalam Pala Kaaththirunthom
Kanna Perumaanae
Karpanaiyil Vaazhnthirunthom
Kanna Perumaanae

Kavalukku Vanthu Nindraai
Kanna Perumaanae
Kai Niraiya Selvam Thanthaai
Kanna Perumaanae

Kaalam Pala Kaaththirunthom
Kanna Perumaanae
Karpanaiyil Vaazhnthirunthom
Kanna Perumaanae

Ooraayiram Kodi Uyarnthaalum Unnai
Oru Naalum Maravaamal Pani Seivom Kannaa
Thondraamal Thondri Parisaaa Vanthaai
Sugamaana Vaazhvondru Arul Seithaai Mannaa

Aagaayam Ettum Vannam
Pugazh Vantha Pothum
Agangaaram Endrumillai
Panivundu Kannaa

Kavalukku Vanthu Nindraai
Kanna Perumaanae
Kai Niraiya Selvam Thanthaai
Kanna Perumaanae

Paaruvaththil Dheivangal Tharum Ennumpothu
Paranthaaman Arulindri Nalvaazhvu Yaedhu
Oor Vanthu Uravendru Uravaadum Neram
Orr Sollil Adangaathu Nee Thantha Vaazhvu


Maanikka Panthalittu Manai Kattinaalum
Kaanikkai Unakkundu Kannaana Kannaa

Kavalukku Vanthu Nindraai
Kanna Perumaanae
Kai Niraiya Selvam Thanthaai
Kanna Perumaanae

Thaayendrum Saeyendrum Santhosa Paattu
Thanthaikku Nee Thantha Nalvaakku Seettu
Pattaadai Nagaiyendru Pillaikku Pottu
Paarkkindra Suganthannai Nilaiyaakki Kaattu

Maangalyam Thantha Deivam Pallaandu Vaazha
Mangaatha Arul Vendum Navaneedha Kannaa

Kaalam Pala Kaaththirunthom
Kanna Perumaanae
Karpanaiyil Vaazhnthirunthom
Kanna Perumaanae

Kavalukku Vanthu Nindraai
Kanna Perumaanae
Kai Niraiya Selvam Thanthaai
Kanna Perumaanae

Kaalam Pala Kathirunthom Song Lyrics From Aan Pillai Singam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies