Kannamma Kannamma Kaathirundhen

Kannamma Kannamma Kaathirundhen Lyric In English


கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட

விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

பாதையில கெடந்த முள்ளு குத்தியும்தான் வலிக்கலையே பச்சத் தண்ணி கூட இன்னும் தொண்டையத்தான் நனைக்கலையே செவப்பேறி கண்ணு ரெண்டும் கெறங்கி இப்போ தவிக்குதம்மா ஒன் நெனப்பா உள்ளம் இங்கே தவம் கெடந்து துடிக்குதம்மா

சிந்தும் கண்ணீர் பூமியிலே சிந்து கவி பாடுதடி சிந்தையிலே ஒன் நெனப்பு சிறகடிச்சு பறக்குதடி கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

துடுப்பிழந்த படகப் போல தவிக்குதம்மா என் இதயம் துருப் பிடிச்ச என் வாழ்வில் வந்திடுமோ ஓர் உதயம் குடத்திலிட்ட விளக்காக ஆகிவிட்ட காதல் கதை கிணற்று தவளப் போல இருக்குதடி என் நெலம


கொட்டுதடி நெஞ்சில் ரத்தம் கொஞ்சந்தாடி உந்தன் முத்தம் நான் எட்டுத் திக்கும் போட்ட சத்தம் கேக்கலயா உனக்கு மட்டும் கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட

விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா


Kannama Kannama Kaathirundhen Kannama
Unna Kaanama Kaanama Nogudhu En Vizhiyamma
Kaneeru Sotta Sotta Kann Paarthen Kotta Kotta
Kaneeru Sotta Sotta Kann Paarthen Kotta Kotta

Vizhinoga Kaathirundhen Velli Nila Kaanalaiyae
Vazhiyoram Kaathirunthen Vaira Nilaa Kaanalaiyae
Kannama Kannama Kaathirundhen Kannama
Unna Kaanama Kaanama Nogudhu En Vizhiyamma

Paathaiyilae Kedantha Mullu Kuthiyum Thaan Valikalaiyae
Pacha Thanni Kooda Innum Thondaiyathaan Nanaikalaiyae
Sevapperi Kannu Rendum Kerangi Ippo Thavikkudhamma
On Nenappa Ullam Ingae Thavam Kedanthu Thudikuthamma

Sindhum Kanneer Boomiyilae Sindhu Kavi Paaduthadi
Sinthaiyilae On Nenappu Siragadichuu Parakkuthadi
Kannama Kannama Kaathirundhen Kannama
Unna Kaanama Kaanama Nogudhu En Vizhiyamma


Thudupizhandha Padaga Pola Thavikkudhamma En Idhayam
Thuru Pidicha En Vaazhvil Vandhidumoo Orr Udhayam
Kudathilitta Vilakaaga Aagivitta Kaadhal Kadhai
Kinattru Thavala Pola Irukkuthadi En Nelama

Kottuthadi Nenjil Ratham Konjamthadi Undhan Mutham
Naan Ettu Thikkum Potta Satham Kekealaya Unakku Mattum
Kannama Kannama Kaathirundhen Kannama
Unna Kaanama Kaanama Nogudhu En Vizhiyamma
Kaneeru Sotta Sotta Kann Paarthen Kotta Kotta
Kaneeru Sotta Sotta Kann Paarthen Kotta Kotta

Vizhinoga Kaathirundhen Velli Nila Kaanalaiyae
Vizhiyoram Kaathirunthen Vaira Nilaa Kaanalaiyae
Kannama Kannama Kaathirundhen Kannama
Unna Kaanama Kaanama Nogudhu En Vizhiyamma

Kannamma Kannamma Kaathirundhen Song Lyrics From Namma Ooru Nayagan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies