கோகுலத்து ராதை வந்தாளோ பாடல் வரிகள்

Starring Mammootty, Abbas, Murali, Devayani
Movie Aanandham
Music ByS. A. Rajkumar
Lyric By Pa. Vijay
SingersS. P. B. Charan, Sujatha Mohan, Unni Menon, Yugendran
Year 2001

Gokulathu Radhai Lyric In English

சூடி தந்த சுடர்க்கொடியே
சுபவேளை நீ வருக
தேடிக் கொண்ட திரவியமே
தேன் மாலை போல வருக

மின்னும் அம்பு விழி சந்திர
பிம்பம் பொன்னொளி வீச
மங்கை மைதிலி இவள்
செம்மலர் பாதத் தண்டைகள் ஆட

சங்கம் சூழ வருக
ஸ்ரீரங்கன் தாளை அடைய
வளர் திங்களாகி வருக

கோகுலத்து ராதை வந்தாளோ
இந்த கல்யாண தேரிலே கல்யாண தேரிலே
மிதிலை நகர் சீதை வந்தாளோ
எங்கள் வீட்டோடு வாழவே வீட்டோடு வாழவே

அந்த தென்மதுரை மீனாள்
விளக்கேற்ற வந்தாள்
சீதனமாய் கையில்
தாய்ப்பாசம் கொண்டு வந்தாள்

கோகுலத்து ராதை வந்தாளோ
இந்த கல்யாண தேரிலே
மிதிலை நகர் சீதை வந்தாளோ
எங்கள் வீட்டோடு வாழவே

பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க
பெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க
தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க
இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க

உங்க மாப்பிள்ளையின் நெஞ்சை
அம்மானை ஆடி
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே
எங்கள் பொண்ணு


மூணு முழம் மல்லிகைப்பூவும்
கொஞ்சம் அல்வாவும் போதுமே
எந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்
அடி தலை சாஞ்சு மயங்குமே

தஞ்சாவூர் பொம்மப் போலத்தான்
உங்க மாப்பிள்ளைத்தான் தலையாட்டுவான்
ஆமா தலையாட்டுவான்

தேசிங்கு ராஜன் எங்கண்ணன் ஹோய்
உங்க குதிரை வாலாட்டுமா
ஆமா வாலாட்டுமா

ஏய் தப்பாம எங்கப்
பொண்ணு செய்வாளே தந்திரம்
சிங்கத்தை கட்டிப்
போடும் தலைகாணி மந்திரம்

போட்டியெல்லாம் போட்டுப் பாத்தோம்டி
அது நமக்குள்ள தானடி
சோடியத்தான் நல்லாப் பாருடி
மதுர மீனாட்சி சொக்கன்டி

வெள்ளிப்பனி முற்றத்தில்
வெட்கம் எனும் தோட்டத்தில்
மல்லிகை பூத்ததோ
புது மல்லிகை பூத்ததோ

மாடக் குயில் சத்தத்தில்
மஞ்சள் முகம் நாணத்தில்
மங்கலம் வந்ததோ
தினம் மங்கலம் வந்ததோ

இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில்
தீபத் திருவிழா
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே
சின்ன வெண்ணிலா

எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு
தென்றல் சந்தனம் பூசுதோ
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்
ஒரு தேவதை வந்ததோ

Gokulathu Radhai Song Lyrics from movie Aanandham. Gokulathu Radhai song sung by S. P. B. Charan, Sujatha Mohan, Unni Menon, Yugendran. Gokulathu Radhai Song Composed by S. A. Rajkumar. Gokulathu Radhai Song Lyrics was Penned by Pa. Vijay. Aanandham movie cast Mammootty, Abbas, Murali, Devayani in the lead role actor and actress. Aanandham movie released on 2001

Gokulathu Radhai Song Lyrics From Aanandham | கோகுலத்து ராதை வந்தாளோ பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies