மழைக்குருவி பாடல் வரிகள்

Starring Silambarasan, Aditi Rao Hydari
Movie Chekka Chivantha Vaanam
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersA R Rahman
Year 2018

Mazhai Kuruvi Lyric In English

நீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல் வானம் குனிவதிலும்
மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்துபடும்
மௌனபெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது

கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஒரங்கா நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்

கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பெரட்டை பேருறவோ... யார் வரவோ...

நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ... இல்லை பரிவோ...!

நீல மழைச்சாரல் நநந.... ந நநநா....

அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே


கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது

முகிலன்னம் சர சர சரவென்று கூட
இடிவந்து பட பட படவென்று வீழ
மழை வந்து சட சட சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட

வானவெளி மண்ணை நழுவி விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர் படுமோ...? துயர் படுமோ...?
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வழித்திடுமோ...? வழித்திடுமோ...?

காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்

காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது கான்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்

Neela Malaichaaral Thendral Nesavu Nadathumidam
Neela Malaichaaral Vaanam Kunivadhilum
Mannai Thoduvadhilum Kaadhal Arindhirundhaen

Kaanam Uraindhupadum
Muana Peruveliyil
Oru Gyaanam Valarthirundhaen
Idhayam Virithirundhaen
Naan Iyarkayil Thilaithirundhaen

Chittu Kuruviyondru Snega Paarvai Kondu
Vatta Paaraiyin Mael Ennai Vaa Vaa Endradhu
Keechu Keech Endradhu Kitta Vaa Endradhu
Paechu Edhuvumindri Piriyama Endradhu

Keechu Keech Endradhu Kitta Vaa Endradhu
Paechu Edhuvumindri Piriyama Endradhu
Otrai Chirukuruvi
Nadathum Oaranga Naadagathil
Satre Thilaithirundhaen

Keechu Keech Endradhu Kitta Vaa Endradhu
Paechu Edhuvumindri Piriyama Endradhu
Oru Naal Kanavo Idhu
Paeratra Pearuravo... Yaar Varavo...

Nee Kanthottu Kadundhaegam Kaatro
Illai Kanavil Naan Kaetkum Paatto
Idhu Uravo... Illai Parivo...!

Neela Malaichaaral Nanana.. Na Naanana..


Alagai Asaithapadi Parandhu Aagaayam Kothiyadhae
Ulagai Udharivittu Satre Uyarae Parandhadhuvae

Keechu Keech Endradhu Kitta Vaa Endradhu
Paechu Edhuvumindri Piriyama Endradhu
Keechu Keech Endradhu Kitta Vaa Endradhu
Paechu Edhuvumindri Piriyama Endradhu

Mugilanam Sara Sara Saravendru Kooda
Idi Vandhu Pada Pada Padavendru Veezha
Mazhai Vandhu Sada Sada Sadavendru Saera
Adaimazhai Kaattukku Kudayillai Mooda

Vaanaveli Mannil Naluvi Vizhundhadhenna
Thisayellam Mazhayil Karaindhu Tholaindhadhenna
Sittu Sirukuruvi Parandha Thisaiyum Theriyavillai
Vittu Pirindhuvittaen Pirindha Vaedhanai Sumandhirundhaen

Vittu Pirindhaen Pirindhaen
Uyir Nanaindhaen Nanaindhaen
Andha Sirukuruvi Ippoadhu
Alaindhu Thuyar Padumo? Thuyar Padumo?
Indha Mazhai Sumandhu,
Adhan Rekka Valithidumo? Valithidumo?

Kaattil Annaeram Kadhaiye Vaeru Kadhai
Koottai Marandhu Vittu Kuruvi Kummiyadithathu Kaan
Sottum Mazhai Sindhum Andha Sugathil Nanaiyaamal
Enai Etti Poanavanai Enni Enni Azhudhadhu Kaan Azhudhadhu Kaan

Kaattil Annaeram Kadhaiye Vaeru Kadhai
Koottai Marandhu Vittu Kuruvi Kummiyadithathu Kaan
Sottum Mazhai Sindhum Andha Sugathil Nanaiyaamal
Enai Etti Poanavanai Enni Enni Azhudhadhu Kaan Azhudhadhu Kaan

Mazhai Kuruvi Song Lyrics from movie Chekka Chivantha Vaanam. Mazhai Kuruvi song sung by A R Rahman. Mazhai Kuruvi Song Composed by A R Rahman. Mazhai Kuruvi Song Lyrics was Penned by Vairamuthu. Chekka Chivantha Vaanam movie cast Silambarasan, Aditi Rao Hydari in the lead role actor and actress. Chekka Chivantha Vaanam movie released on 2018

Mazhai Kuruvi Song Lyrics From Chekka Chivantha Vaanam | மழைக்குருவி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies