Aandavaney Survey Pottu

Aandavaney Survey Pottu Song Lyrics In English


ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

நம்ம ஊரு பண்ணையாருக்கு
நஞ்சை புஞ்சை ஏராளமா
காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும்
தூரம் வரை

ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

கூலிகளை கொறைச்சு கொறைச்சு
கோடி சொத்து சேர்க்கவும்
ஏழைகளை ஏச்சு ஏச்சு
மாடிவீடு வாங்கவும்

தங்கம் வெள்ளி வைரங்களும்
முத்துமணி பவளங்களும்
உங்களுக்கு பரம்பரையா
வந்ததென்ன தலைமுறையா

எல்லாரும் கடவுள் பெத்த
கண்ணான பிள்ளைங்கதான்
எங்களைத்தான் விட்டுபுட்டு
தேடி பார்த்து உங்களுக்கு

ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா


பாடுபட்ட விவசாயிக்கு
பட்டாபோட்ட நிலமும் இல்ல
பட்டு நெய்யும் நெசவாளிக்கு
மேல நல்ல துணியும் இல்ல

வீடு கட்டு கொத்தனாரு
வீடு ஏதும் வாங்கவில்லை
கூடி நிற்கும் பாட்டாளிக்கு
கூழுக்கொரு வழியும் இல்ல

ஊரெங்கும் பஞ்சம் வந்தா
உங்களுக்கு வருவதில்லை
என்னய்யா தலை எழுத்து
எங்களுக்கு புரியவில்லை

ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

நம்ம ஊரு பண்ணையாருக்கு
நஞ்சை புஞ்சை ஏராளமா
காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும்
தூரம் வரை

ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா