Aasai Vachen

Aasai Vachen Song Lyrics In English


ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே

ஆதரிச்சா நல்லதையா
இல்ல அரளி வெதை உள்ளதையா
அரளி வெதை உள்ளதையா

ஆசை வச்சேன்உன் மேல
உன் மேல

சண்ட போட்ட கெண்டை மீனு
ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு
ரெண்டும் சேந்து கொஞ்சும் போது
ஏரித் தண்ணி தேனாச்சு

தூண்டியிலே சிக்கவில்ல
சுத்தி வர கொக்கும் இல்ல
மீனு ரெண்டும் தூங்கயில
அக்கம் பக்கம் யாரும் இல்ல

ரெண்டு மீனும் கண் முழிச்சா
ஏரியில தண்ணி இல்ல
ஏரியில தண்ணி இல்ல

ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
ஆசை வச்சேன் உன் மேல
உன் மேல


தென்னந்தோப்பில் என்னப் பாத்து
சொன்ன வார்த்த என்னாச்சு
அப்பன் பேசும் பேச்சக் கேட்டு
காது ரெண்டும் புண்ணாச்சு

ரெக்கை எல்லாம் வெட்டிப் புட்டு
நிக்குதையா பச்சக் கிளி
ஊருக்குள்ள ஓமலிப்பு
வாடுதையா வஞ்சிக் கொடி

கட்டிலிலே தேங்கி நிக்கும்
கண்ணீர் மட்டும் ரெண்டு படி
கண்ணீர் மட்டும் ரெண்டு படி

ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே
ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன்
கொல்லையிலே

ஆதரிச்சா நல்லதையா
இல்ல அரளி வெதை உள்ளதையா
அரளி வெதை உள்ளதையா

ஆசை வச்சேன்உன் மேல
உன் மேல