Aayi Mahamayi

Aayi Mahamayi Song Lyrics In English


ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

அம்மான்னு சொன்னாலே போதும் அன்பென்னும் வெள்ளம்தான் மோதும் அம்மான்னு சொன்னாலே போதும் அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்

சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி

ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

மங்கல குங்குமப் பொட்டுக்காரி மாலினி சூலினி வித்தக்காரி மின்னிடும் வேப்பல சேலக்காரி மணக்குற எலுமிச்ச மாலக்காரி

வேம்பாட்டம் பாம்பாட்டம் காட்சி கொடுப்பா ஊருக்கும் உலகுக்கும் காவல் இருப்பா ஆயிரம் கண்ணி அந்த தாயையே எண்ணி நீ சத்தியம் தாங்குவேன்னு கையிலே வாங்கு

மாதவ சோதரி முத்துமாரிதான் தாண்டவம் ஆடினா பத்ரகாளிதான்

ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

அம்மான்னு சொன்னாலே போதும் அன்பென்னும் வெள்ளம்தான் மோதும் சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி


ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்

அன்னையை பாடுது நாலு வேதம் ஆணையை கேட்குது பஞ்சபூதம் ஆலய பூஜைதான் ஆறுகாலம் அன்னையை போற்றுது ஏழு லோகம்

எப்போது கேட்டாலும் பம்பை சத்தம் ஆத்தாக்கு சந்தோசம் ஆக மொத்தம் ஆடியில் கூழ காய்ச்சி ஊத்துற ஏழை வேண்டினா போதும் அவங்க வேதன தீரும்

சக்தி ஓம் என்று நாம் பாட்டெடுக்கலாம் நம்பினால் நாமும்தான் தீ மிதிக்கலாம்

ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

அம்மான்னு சொன்னாலே போதும் அன்பென்னும் வெள்ளம்தான் மோதும் சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி

ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி