Adi Aathi Adi Aathi |
---|
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
நேற்று எந்தன் கனவில் வந்தால்
நிலவின் ஒளியை உடை உடுத்தி
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
நெஞ்சோடு கொள்ளையடித்தால்
நெற்றியில் சரியும் முடி திருத்தி
கண்டதும் காதல் கொண்டேன்
காதலை சொல்ல துடித்தேன்
உள் நாக்கு ஒட்டி கொள்ள
ஊமையாய் நின்று தவித்தேன்
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
நேற்று எந்தன் கனவில் வந்தால்
நிலவின் ஒளியை உடை உடுத்தி
லல லாலா லல லாலா
லல லாலா லாலா லல லாலா
லாலாலலலலலலலாலா
கனவிலே வந்தவள் ஐயோ
காலையில் நேரில் வந்து தொலைத்தால்
மின்னலை ஒன்றாய் கோர்த்து
புன்னகை செய்து கண்ணை பறித்தால்
என் நெஞ்சில் உள்ளதை எல்லாம்
எழுத்துகூட்டி சொல்ல நினைத்தேன்
முந்தானை மூஞ்சியில் பட்டதும்
மூச்சு மறந்து மூச்சை அடைத்தேன்
ஆண்மையை திருடும் அழகி
அவள் போல் யாரும் இல்லை
ஆசையை சொல்லாவிட்டால்
மீசைக்கு அர்த்தம் இல்
பார்வையில் பேசிய வார்த்தை
நாவிலே வெளி வரவில்லை
பாற்கடல் பக்கம் இருந்தும்
பூனைக்கு தைரியம் இல்லை
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
ஹோய் அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
நேற்று எந்தன் கனவில் வந்தால்
நிலவின் ஒளியை உடை உடுத்தி
விழிகளை திருடிய மங்கை
வேற் எங்கும் இல்லை வேற் எங்கும் இல்லை
கூப்பிடு தூரத்தில் நின்றால்
கூப்பிடதானே குரல் வலையில்லை
ஆணுக்கு நாணம் வந்தால்
அதை விட வேறு அவஸ்தையும் இல்லை
ஊட்டியில் பச்சை தண்ணீரில்
குளிப்பது போலே இது ஒரு தொல்லை
வண்டுகள் விண்ணப்பம் போட்டு
திறப்பவை மொட்டுகள் இல்லை
மௌனத்தில் காதல் புரிந்தால்
வாழ்க்கையில் வழியே இல்லை
ஆகாயம் திரும்பி கொண்டால்
பூமிக்கு மழை துளி இல்லை
அவள் என்னை விரும்பா விட்டால்
என் வாழ்வில் மிச்சம் இல்லை
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
நேற்று எந்தன் கனவில் வந்தால்
நிலவின் ஒளியை உடை உடுத்தி
அடி ஆத்தி அடி ஆத்தி
அழகான பெண் ஒருத்தி
நெஞ்சோடு கொள்ளையடித்தால்
நெற்றியில் சரியும் முடி திருத்தி
கண்டதும் காதல் கொண்டேன்
காதலை சொல்ல துடித்தேன்
உள் நாக்கு ஒட்டி கொள்ள
ஊமையாய் நின்று தவித்தேன்