Amaithiyaana Nathiyinile |
---|
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
தென்னம்
இளங்கீற்றினிலே
தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது
தென்னைதனைச்
சாய்த்துவிடும் புயலாக
வரும்பொழுது
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை
மேட்டினிலே ஆடி
நிற்கும் நாணலது
காற்றடித்தால்
சாய்வதில்லை கனிந்த
மனம் வீழ்வதில்லை
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
நாணலிலே
காலெடுத்து நடந்து
வந்த பெண்மை இது
நாணம் என்னும்
தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
அந்தியில்
மயங்கி விழும்
காலையில் தெளிந்து
விடும்
அன்பு மொழி
கேட்டுவிட்டால் துன்ப
நிலை மாறிவிடும்
ஆண் & அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண் & காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
ஆண் & அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்