Antha Sivagami |
---|
ஆஆஆ
ஆஆஆ
அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி
வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி
அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி
கண்கள் சரவணன்
சூடிடும் மாலை கன்னங்கள்
வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென
பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல்
வேறென்ன வேலை
நெஞ்சே தெரியுமா
அன்றொரு நாளிலே
நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி
மலையின்
சந்தனம் மார்பின்
சொந்தம் மங்கையின்
இதயமோ காளையின்
சொந்தம்
நிலையில்
மாறினால் நினைவும்
மாறுமோ நெஞ்சம்
நெருங்கினால் பேதங்கள்
தோன்றுமோ
காலம்
மாறினால் காதலும்
மாறுமோ
மாறாது
மாறாது இறைவன்
ஆணை
ஆண் & என்றும்
மாறாது மாறாது இறைவன்
ஆணை
இந்த சிவகாமி
மகனுடன்
சேர்ந்து நில்லடி இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
தோகை இல்லாமல்
வேலன் ஏதடி
அந்த சிவகாமி
மகனிடம்
சேதி சொல்லடி என்னை
சேரும் நாள் பார்க்க
சொல்லடி