Arabu Naade

Arabu Naade Song Lyrics In English






லஹில லஹிலா
லஹில லஹிலா

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே

என் கண்மணி
காதோடு சொல் உன்
முகவரி ஓ ஓ எந்நாளுமே
என் பாட்டுக்கு நீ முதல்
வரி ஹே ஹே ஹே

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே

அரபு நாடே அசந்து
நிற்கும் அழகியா நீ உருது
கவிஞன் உமர்கயாமின்
கவிதையா ஹே ஹே
ஹே

ஏ உன்னுடைய
நெற்றி உன்னை பற்றி
கூறுதே உள்ளிருக்கும்
பொட்டு உந்தன் குட்டு
சொல்லுதே

என்னுடைய பார்வை
கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
ஓஓ எனக்கிருக்கும் சக்தி பரா
சக்தி புரிஞ்சுக்கோ


கால் கொலுசு தான்
கல கலக்குது கையின்
வளையல் காது குளிர
கானம் பாட ஹே ஹே

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே

போட்டிருக்கும்
கோஷா வேஷம் பேஷா
பொருந்துதே பெண் அழகு
மொத்தம் காண சித்தம்
விரும்புதே

வெண்ணிலாவின்
தேகம் மூடும் மேகம்
விலகுமா வண்ண உடல்
யாவும் காணும் யோகம்
வாய்க்குமா

கொஞ்சம் கொழுப்பு
கொஞ்சம் திமிரு எனக்கும்
இருக்கு உனக்கு மேலே
அன்பு தோழி ஹே ஹே

லஹில லஹிலா
லஹில லஹிலா

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே

லஹில லஹிலா
லஹில லஹிலா