Avalo Avalo

Avalo Avalo Song Lyrics In English


வசனம் :

சொல்லாத வார்த்தைகள் சுவையானவை
அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை
சொல்லுக்குள் உன்னை சுருக்கி விட மனம் இல்லை
அளவில்லா உணர்வுகளை அரை பக்கத்தில் அடைத்து வைக்கும்
ஆசையும் இருந்ததில்லை

உன் நெற்றி பரப்பில் என் விரல் தொடும் போதும்
உன் கழுத்தில் பரவி என் மூச்சு சுடும் போதும்
உன் உயிரை எழுப்ப நான் முத்தம் இடும் போதும்
புரிந்துகொள் என் பேரன்பை

சொல்லாத வாரத்தைகள் சுவையானவை
அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை

அவளோ அவளோ நிலவின் போதை துகளோ
அவளோ அவளோ கார் குழல் விரியும் மயிலோ
திசை அறியாத மேகம்
தலையினில் விழுதோ
கடவுள் கை கொண்டு எழுத முடியாத
கவிஞனின் கற்பனையோ


கோதை மடியில் தோகை கனவு
கோதும் விரலாக என் வாழ்வே
தேனாடும் நினைவெல்லாம் அவள்தானா
தேவை எல்லாம் அவள் தென்றல் முகம்தானாஆ

தூரிகை காரிகை
நீ செய்த வண்ணங்கள் நான்
உன்னை போலே என் பிம்பம்
உள்ளே வாழ்வது நானாநீதானா
ஆஅஆஅஆஅ