Avani Ellam

Avani Ellam Song Lyrics In English




அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்

நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்

அனைவரும் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்

தோரணம் கட்டிய வீதியிலேஏஹே

தங்கத் தேரோடி வரும் வேளையிலேஏஹே

பெண் தோரணம் கட்டிய வீதியிலேஏஹே

ஆண் தங்கத் தேரோடி வரும் வேளையிலேஏஹே

தோகை மயிலென ஆடிடுவோம்
பெண் தோகை மயிலென ஆடிடுவோம்

காஞ்சித் தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்
ஆண் காஞ்சித் தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்

அனைவரும் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்

குலை வாழை தன்னை தானே
விலை கூறுது
கரும்பு கூட்டத்திலே தென்றல் வந்து
நடை போடுது

ஆண் குலை வாழை தன்னை தானே
விலை கூறுது
கரும்பு கூட்டத்திலே தென்றல் வந்து
நடை போடுது

மலையெல்லாம் கவிதை பொங்கும்
சிலையாகுது

ஆண் மலையெல்லாம் கவிதை பொங்கும்
சிலையாகுது


நம்ம மகராசன் கனவு இங்கே
நிறைவேறுது

ஆண் நம்ம மகராசன் கனவு இங்கே
நிறைவேறுது

அனைவரும் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்

ஆண் ஐலேசா ஐலசா ஐலேசா
ஐலேசா ஐலசா ஐலேசா

வலை ஈசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தின் மடியிருக்கு

பெண் ஐலேசா ஐலசா ஐலேசா
ஐலேசா ஐலசா ஐலேசா

வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தின் மடியிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கலைக் காக்க நரசிம்மன் துணையிருக்கு
கண்ணே கனியமுதே
உன்னால் எந்தன் உயிரிருக்கு
கண்ணே கனியமுதே
உன்னால் எந்தன் உயிரிருக்கு

அனைவரும் : ஐலேசா ஐலசா ஐலேசா
ஐலேசா ஐலசா ஐலேசா
ஐலேசா ஐலசா ஐலேசா
ஐலேசா ஐலசா ஐலேசா

ஓஓஓஒஓஒஓஒஓஒ

கன்னம் சிவந்திட கூந்தல் கலந்திட
என்ன நடந்தது கூறடி
உந்தன் எண்ணம் கவர்ந்தவன் யாரடி
கன்னம் சிவந்திட கூந்தல் கலந்திட
என்ன நடந்தது கூறடி
உந்தன் எண்ணம் கவர்ந்தவன் யாரடி
வீர நடையாளனோ யானைப் படையாளனோ

பெண் வீர நடையாளனோ யானைப் படையாளனோ

மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோஓ

பெண் மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோஓ

அனைவரும் : அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்