Chinnanchiru Kiliye

Chinnanchiru Kiliye Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

சின்னஞ்சிறு கிளியே
தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி
நான் வளர்த்த சூரியனே
துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில்
புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்
அறிவாயோ ஹோ

சின்னஞ்சிறு கிளியே
தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி
நான் வளர்த்த சூரியனே

பகல் நேரத்திலும்
நிலா கேட்கும் உந்தன்
கண்ணில் நிலவு குடியிருக்கும்
இதழ் ஓரத்திலும்
சிந்தும் தேன் துளிகள்
அமுதாய் அமுதாய் அது இனிக்கும்

நீ சிரித்தால்
அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்
நீ பார்த்தால்
மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும்
அறிவாயோ ஹோ

சின்னஞ்சிறு கிளியே
தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி
நான் வளர்த்த சூரியனே


என்னை அன்னை என்றான்
வரம் அள்ளி தந்தான்
மகனாய் பிறந்து தவம் முடித்தான்
விழி தேடி வந்து
மடி ஆடி நின்று
எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்

உன் நிழலும்
என் மகன் போல பாலூட்ட கேட்கும்
தாலாட்டும் இந்த சொந்தங்கள்
எப்போதும் வேண்டும்
ஆராரோ ஹோ

சின்னஞ்சிறு கிளியே
தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி
நான் வளர்த்த சூரியனே
துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில்
புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்
அறிவாயோ ஹோ

சின்னஞ்சிறு கிளியே
தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி
நான் வளர்த்த சூரியனே